சைக்கிள் சின்னம் கோரிய மனு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு
சைக்கிள் சின்னம் கோரிய மனு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு
சைக்கிள் சின்னம் கோரிய மனு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு
ADDED : பிப் 24, 2024 07:32 PM
சென்னை:லோக்சபா தேர்தலில், 'சைக்கிள்' சின்னம் ஒதுக்கக் கோரி, த.மா.கா., தாக்கல் செய்த மனுவை, தகுதி அடிப்படையில் பரிசீலிக்க, தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில், 'லோக்சபா தேர்தலில், எங்கள் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி, தேர்தல் ஆணையத்திடம், இம்மாதம், 6ம் தேதி மனு அளிக்கப்பட்டது.
'எங்கள் மனு குறித்து, இன்னும் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கவில்லை. 2019ம் ஆண்டு தேர்தலை போல, இந்த தேர்தலிலும் சைக்கிள் சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் சாய்கிருஷ்ணன், மகாதேவன் ஆஜராகினர்.
தேர்தல் ஆணையம் சார்பில், வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி, ''ஆணையத்திடம் அளித்த மனுவில் குறைகள் உள்ளதால், அதை சரி செய்து அளித்தால் பரிசீலிக்கப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், த.மா.கா.,வின் மனு பரிசீலிக்கப்படும்,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், த.மா.கா.,வின் மனுவுக்கு முன்னுரிமை அளித்து, தகுதி அடிப்படையில் பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.