Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

ADDED : ஜூன் 14, 2024 04:45 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வழக்கு தொடர்பான ஆவணங்களை தனக்கு வழங்கக்கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், நீதிமன்ற உத்தரவுப்படி அசல் ஆவணங்களை வழங்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

கடந்த 2012 முதல் 2022 வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் வங்கிகளில் பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் விவரங்களை வழங்கக்கோரியும், செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் பணம் டிபாசிட் செய்தவர்களின் பான்கார்டு விவரங்களை தெரிவிக்கவும் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரியிருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று, செந்தில்பாலாஜியின் மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில்பாலாஜி தொடர்ந்த மனு மீது வரும் 19ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறியுள்ளது.

காவல் நீட்டிப்பு

இதனிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி உள்ள செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல், வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜி காவல் நீட்டிக்கப்படுவது இது 39 வது முறை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us