ராஜினாமா முடிவில் பா.ம.க., எம்.எல்.ஏ.,; தந்தை - மகன் மோதலில் அடுத்த திருப்பம்
ராஜினாமா முடிவில் பா.ம.க., எம்.எல்.ஏ.,; தந்தை - மகன் மோதலில் அடுத்த திருப்பம்
ராஜினாமா முடிவில் பா.ம.க., எம்.எல்.ஏ.,; தந்தை - மகன் மோதலில் அடுத்த திருப்பம்

திட்டவட்டம்
'என் மூச்சிருக்கும் வரை பா.ம.க., தலைவராக இருப்பேன்' என, ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 15ம் தேதியில் இருந்து, மாவட்ட வாரியாக பா.ம.க., பொதுக்குழு கூட்டங்களை, அன்புமணி நடத்தி வருகிறார்.
இரு அணிகள்
சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துமனையில், இ.சி.ஜி., எக்கோ ஆகிய பரிசோதனைகளுக்கு பின், தீவிர சிகிச்சைப் பிரிவில், அவர் அனுமதிக்கப்பட்டார். இதேபோல, பா.ம.க., கவுரவத் தலைவரும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜி.கே.மணியும் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, உடல்நலக் குறைவால், சென்னை அப்போலோ மருத்துவமனையில், நேற்று அனுமதிக்கப்பட்டார்.
குழப்பம்
இதற்கிடையில், அன்புமணியின் இன்றைய மாவட்ட பொதுக்குழுவை தவிர்ப்பதற்காக, கோவில் விழா, உறவினர் வீட்டு நிகழ்ச்சி என, முன் கூட்டியே பா.ம.க., நிர்வாகிகள் சிலர் வெளியூர் சென்றுவிட்டனர். இந்நிலையில், ராமதாஸ் ஆதரவாளர்களான ஜி.கே.மணி, அருள் ஆகிய இருவரும், அன்புமணி கூட்டம் நடைபெறும் நிலையில், ஒரே நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.