பொதுக்கூட்ட மைதானத்தில் குவியும் பாலிதீன்: அரசியல் கட்சியினரே பொறுப்பேற்க யோசனை
பொதுக்கூட்ட மைதானத்தில் குவியும் பாலிதீன்: அரசியல் கட்சியினரே பொறுப்பேற்க யோசனை
பொதுக்கூட்ட மைதானத்தில் குவியும் பாலிதீன்: அரசியல் கட்சியினரே பொறுப்பேற்க யோசனை

ஏ.ஐ., மூலம் சாத்தியம்
மக்காத பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியில் ஏராளமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. குப்பைக் கழிவுகளை ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக அகற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கவும் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இருப்பினும், அவர்களுக்கும், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு, தொடர்பு இல்லை. இவர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் தான், கழிவு மேலாண்மை மன்றம் துவங்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்களில் குவியும் பாலிதீன்
தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் திரளும் நிலையில், கூட்டம் முடிந்து அவர்கள் கலைந்து செல்லும் போது, டன் கணக்கில் பாலிதீன் பாட்டில், கவர் உள்ளிட்டவை சிதறிக்கிடக்கின்றன. அவற்றை சுத்தப்படுத்தும் பணியில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் துாய்மைப் பணியாளர்கள் ஈடுபடும் போது, அவர்களால் தங்களின் அன்றாடப்பணிகளில் கவனம் செலுத்த முடிவதில்லை.
பாடமாக்க வேண்டும்
மேலும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்வது தொடர்பான தொழில்நுட்ப தகவல்களை பள்ளி, கல்லுாரிகளில் பாடமாக வைக்க வேண்டும். பாலிதின் பைக்கு மாற்றாக, இயற்கை சார்ந்த ஏராளமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.


