பூம்புகார் - நாகப்பட்டினம் தொல்லியல் ஆய்வு துவக்கம்
பூம்புகார் - நாகப்பட்டினம் தொல்லியல் ஆய்வு துவக்கம்
பூம்புகார் - நாகப்பட்டினம் தொல்லியல் ஆய்வு துவக்கம்
ADDED : செப் 20, 2025 02:06 AM
சென்னை:நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகாரில் இருந்து நாகப்பட்டினம் வரை கள ஆய்வு செய்யும் பணியை, தமிழக தொல்லியல் துறை துவக்கி உள்ளது.
முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், துறைமுக நகரமாகவும் இருந்த காவிரிபூம்பட்டனம், பின், சுனாமியால் அழிந்ததாக கூறப்படுகிறது. இது, காவிரி கடலில் கலக்கும் இடம் என்பதால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அங்கிருந்து, 50 கி.மீ., தொலைவில் உள்ள நாகப்பட்டினம், பிற்கால சோழர்களின் துறைமுக நகரமாக இருந்தது. இங்கிருந்து, கிழக்காசிய நாடுகளுக்கான கப்பல்கள் இயக்கப்பட்டன.
இந்த இரண்டு இடங்களுக்கு இடையில் உள்ள கடல் பகுதியில் ஆய்வு செய்து, தொல்லியல் சான்றுகளை சேகரிப்பதற்கான அனுமதியை, தமிழக தொல்லியல் துறைக்கு, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியமான, 'காபா' வழங்கி உள்ளது.
அதன்படி, கடலடி ஆய்வை துவக்கும் முன், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இரண்டு ஊர்களுக்கும் இடையில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், கடலடியில் நிலம் மற்றும் கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றை கண்டறியும் கள ஆய்வை, தொல்லியல் துறை துவக்கியுள்ளது.


