தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி 7.7 சதவீதமாக சரிவு
தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி 7.7 சதவீதமாக சரிவு
தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி 7.7 சதவீதமாக சரிவு
ADDED : ஜூலை 14, 2024 12:32 AM

சென்னை: உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, சென்னையில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற பின், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில், தேசிய அளவில், 'தாய் மற்றும் சேய் நல்வாழ்விற்கு சரியான வயதில் திருமணம், போதிய பிறப்பு இடைவெளி சிறந்தது' என்ற கருப்பொருள்படி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
குடும்பநல திட்டத்தை செயல்படுத்துவதில், நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகும். இந்தியாவின் மக்கள் தொகை, 145.3 கோடி; தமிழக மக்கள் தொகை 8.4 கோடி. தமிழகத்தில் பிறப்பு விகிதம், 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட 1,000 பெண்களுக்கு 13.8 ஆக உள்ளது.
பிரசவத்தின் போது மரணம் அடைவோர் விகிதம், ஒரு லட்சம் பெண்களுக்கு, 45.6 ஆக உள்ளது. சிசு மரணத்தை பொறுத்தவரையில் 1,000 குழந்தைகளுக்கு, 13 என்ற அளவில் உள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்து, தற்போது, 7.7 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. பூஜ்ஜியம் என்ற நிலையை, 2035ம் ஆண்டுக்குள் அடைந்த முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறும்.
இவ்வாறு கூறினார்.