ஸ்ரீரங்கம் கோவிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்
ஸ்ரீரங்கம் கோவிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்
ஸ்ரீரங்கம் கோவிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்
ADDED : செப் 03, 2025 05:45 PM

திருச்சி: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னையில் நடந்த சிட்டி யூனியன் வங்கியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்.தொடர்ந்து திருவாரூரில் உள்ள மத்திய பல்கலையில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.