பாரம்பரிய சம்பிரதாயப்படி ராமேஸ்வரம் கோவிலுக்கு அர்ச்சகர்கள் நியமனம்
பாரம்பரிய சம்பிரதாயப்படி ராமேஸ்வரம் கோவிலுக்கு அர்ச்சகர்கள் நியமனம்
பாரம்பரிய சம்பிரதாயப்படி ராமேஸ்வரம் கோவிலுக்கு அர்ச்சகர்கள் நியமனம்

பல தலைமுறைகளாக
ராமேஸ்வரத்தில் வாழும் மராத்திய அந்தண இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கருவறையில் சென்று மூலவருக்கு வழிபாடுகள் செய்யும் உரிமை உள்ளவர்கள். இவர்கள் சிருங்கேரி ஜகத்குருவிடம் தீட்சை பெற்ற பின்புதான் இக்கோயிலில் குருக்களாக நியமிக்கப்படுகிறார்கள். இந்த சமூகத்தினர் பல தலைமுறைகளுக்கு மேலாக ராமேஸ்வரத்திலேயே சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
சிருங்கேரி சங்கராச்சார்ய சுவாமிகளிடம் தீட்சை
கருவறை பூஜை செய்பவர்கள் நேரடியாக குருக்கள் பணியில் நியமனம் செய்யப்படுவதில்லை. மராத்தி பிராமண இனத்தைச் சேர்ந்தவர்களில் தேவையான கல்வித் தகுதி , வேத ஆகம கல்வி பெற்றுள்ளவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்புக்கு உட்பட்டிருப்பவர்கள் விண்ணப்பித்தல் மற்றும் நிர்வாக பரிசீலனையின் அடிப்படையில் முதலில் கைங்கரியம் பதவியில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
பரிந்துரை கடிதம்
பின்னர் குருக்கள் ஓய்வு பெறும் சமயம், கைங்கரியம் ஆக பணிபுரிபவர்கள் சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமிகளிடம் சென்று நேரில் மந்திர தீட்சை பெற்று வரவேண்டும். கைங்கரியம் ஆக பணிபுரிந்து வருபவர்கள் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமிகளிடம் தீட்சை பெற விரும்புவதை அங்கீகரித்து அவருக்கு சிருங்கேரி சென்று வர அனுமதியளிக்கும் கடிதம் திருக்கோயில் இணை / செயல் ஆணையர் மூலம் வழங்கப்பட்டு, சிருங்கேரி சங்கராச்சார்ய சுவாமிகளுக்கு தீட்சாபிஷேகம் செய்து வைக்கும்படி பரிந்துரைத்து கடிதம் அனுப்பப்படுகிறது. அதன்பின் சுவாமிகள் குறித்துத் தரப்படும் தேதியில் அர்ச்சகர்கள் சிருங்கேரி சென்று அங்கே அவர்களுக்கான ஹோமங்கள், அபிஷேகம் ஆகியவை அங்குள்ள முந்தைய ஆசார்யார்களின் அதிஷ்டான வளாகத்தில் விரிவாக நடைபெறும். பின்னர் அவருக்கு மந்தர தீட்சையும், தீட்சா பெயரும் சுவாமிகளே நேரிடையாக அளித்து ஆசீர்வதிப்பார்.
மந்திர உபதேசம்
இந்த சம்பிரதாயத்தின் அடிப்படையில், கணேஷ் நாராயண குண்டேவிற்கு 2016ம் ஆண்டும், சந்தோஷ் ஜோஷிக்கு 2017ம் ஆண்டும், சரவணன் சங்கர ரானடேவிற்கு 2021ம் ஆண்டும், கிரி ஜோஷி, பால கங்காதர ரானடே மற்றும் சரத்சந்திர ராஸ்தே ஆகிய அர்ச்சகர்களுக்கு 2022ம் ஆண்டும், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் மந்திர உபதேசம் செய்வித்து தீட்சா நாமமும் வழங்கினார்.
இவர்கள் முன்னோர்கள் பெற்ற தீட்சா விபரங்கள்:
கணேஷ் நாராயண குண்டேவின் தந்தை ரகுனாத நாராயண குண்டே மற்றும் சந்தோஷ் ஜோஷியின் தந்தை கிருஷ்ண பலிராம் ஜோஷி ஆகியோர் ஜகத்குரு ஸ்ரீ அபினவ வித்யாதீர்த்த மஹா சுவாமிகளிடம் 1988 ம் ஆண்டும்,
பாக்கியம்
முதல்வரை சந்தித்த பின் அர்ச்சகர்கள் கூறியதாவது: இக்கோவிலின் சம்ப்ரதாயப்படி நாங்கள் சிருங்கேரி சுவாமிகளிடம் தீட்சை பெற்றும் பல வருடங்களாகக் காத்திருந்தோம். தற்போது எங்களுக்கு பணி உத்தரவு வழங்கிய முதல்வருக்கும், அமைச்சருக்கும் மற்றும் அறநிலையத்துறை ஆணையர், கோவில் துணை ஆணையர் மற்றும் பணியாளார்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. இக்கோவிலின் பாரம்பரியத்தினை காத்து எங்கள் பணியினை மேற்கொள்ள உள்ளோம்.



