பாக்.,கிற்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி: நயினார்
பாக்.,கிற்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி: நயினார்
பாக்.,கிற்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி: நயினார்
ADDED : மே 18, 2025 01:11 AM

ஓசூர்: ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' என, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று மாலை, 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றிக்கு பாடுபட்ட முப்படை ராணுவ வீரர்கள் மற்றும் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், கொட்டும் மழையில் நடந்த மூவர்ணக்கொடி பேரணியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: ஹிந்து மத கலாசாரப்படி, வீட்டில் ஒருவர் இறந்து விட்டால், 16வது நாள் காரியம் செய்வோம். பஹல்காம் சம்பவம் நடந்து 16 நாட்கள் கழித்து பாகிஸ்தானுக்கு காரியம் செய்த மாவீரன் தான் பிரதமர் மோடி. மேலும், 90 நிமிடங்களில், 9 இடங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தது நம் ராணுவம். நிமிர்ந்தது நம் கவுரவம். நம், 'பிரமோஸ்' ஏவுகணையை வாங்க, 16 நாடுகள் ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டுள்ளன. அப்படியானால் நம் ராணுவம், ராணுவ தளவாடங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை பாருங்கள். அதைவிட சக்தி வாய்ந்தவர் பிரதமர் மோடி.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.