சாக்கு, சணல், லாரிகளுக்கு மாமூல் பிரச்னைகளால் நெல் கொள்முதலில் சிக்கல்
சாக்கு, சணல், லாரிகளுக்கு மாமூல் பிரச்னைகளால் நெல் கொள்முதலில் சிக்கல்
சாக்கு, சணல், லாரிகளுக்கு மாமூல் பிரச்னைகளால் நெல் கொள்முதலில் சிக்கல்



முதல்வர் உத்தரவு
'இந்த ஆண்டு நெல் உற்பத்தி பெருமளவு அதிகரித்துள்ள காரணத்தால், விவசாயிகளிடம் இருந்து எவ்வித தாமதமுமின்றி நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலர் பாண்டியன் கூறியதாவது:
நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில், தலா, 5,000 முதல், 15,000 சிப்பங்கள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 10,000 மூட்டைகளுக்கு மேல் அறுவடை செய்த நெல், கிராமங்கள் தோறும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
அதிருப்தி
சாக்கு, சணல் பற்றாக்குறை மற்றொரு புறம் பெரிய பிரச்னையாக உள்ளது. இதை சமாளிக்க, தனியார் அரவை ஆலைகளில், பயன்படுத்திய சாக்குகளை கொண்டு வந்து கொள்முதல் செய்ய வழங்குகின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டியக்கத்தின் மாநில துணைத் தலைவர் சுகுமாறன் கூறியதாவது:
கொள்முதலில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல்லை கிடங்குக்கு கொண்டு சென்று, அங்கிருந்து அரவை மில்லுக்கு கொண்டு செல்வது வரை வேலை அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், நெல்லை நேரடியாக அரவைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். லாரிகளுக்கான மாமூல் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இதற்காக போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்.


