ADDED : மே 25, 2025 03:37 AM
தமிழகத்தின் 13 மாவட்டங்களில், 20க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை புதிதாக திறக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இந்தியாவிலேயே அதிக அளவில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படும் மாநிலம், தமிழகம் தான். மீண்டும் மீண்டும் மணல் குவாரிகளை திறந்து, தமிழகத்தை, குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களை, பாலைவனமாக மாற்றி விடக்கூடாது. எனவே, புதிய மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும்.
தமிழக ஆறுகளில் செயல்படும் மணல் குவாரிகளை மூடாவிட்டால், என் தலைமையில் பா.ம.க., தொடர் போராட்டங்களை மாநிலம் முழுதும் நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.
- அன்புமணி,
தலைவர், பா.ம.க.,