Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நீலகிரிக்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட்; இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

நீலகிரிக்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட்; இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

நீலகிரிக்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட்; இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

நீலகிரிக்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட்; இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

UPDATED : ஜூன் 11, 2025 06:22 PMADDED : ஜூன் 11, 2025 02:06 PM


Google News
Latest Tamil News
சென்னை: நீலகிரிக்கு வரும் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 11) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:


இன்று (ஜூன் 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை

* திண்டுக்கல்

* தேனி

* திருவண்ணாமலை

* ராணிப்பேட்டை

* காஞ்சிபுரம்,

* செங்கல்பட்டு,

நாளை (ஜூன் 12)

மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி,

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* திண்டுக்கல்

* தேனி

* தென்காசி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

ரெட் அலெர்ட்


நீலகிரிக்கு வரும் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 14ம் தேதி

மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

* தேனி

* தென்காசி

* கன்னியாகுமரி

* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்

கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருப்பூர்

* திண்டுக்கல்

ஜூன் 15ம் தேதி

மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

* தென்காசி

* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்

* கன்னியாகுமரி

கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* திருப்பூர்

* திண்டுக்கல்

* தேனி

ஜூன் 16ம் தேதி

மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* திண்டுக்கல்

* தேனி

* தென்காசி

* திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்

* கன்னியாகுமரி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுரை

இந்நிலையில் கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் முழு வீச்சில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவுரை வழங்கி உள்ளது.



தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு

வானிலை மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரிக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் விரைந்துள்ளனர். மாநில பேரிடர் மீட்புப்படையை பொறுத்தவரை கோவைக்கு 2 குழுக்களும், நீலகிரிக்கு 3 குழுக்களும் விரைந்துள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us