போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோருக்கு மிரட்டல்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோருக்கு மிரட்டல்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோருக்கு மிரட்டல்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
ADDED : ஜூன் 18, 2025 09:57 PM

சென்னை: கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்த காரணத்திற்காக, தமிழக நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவருக்கு மிரட்டல் விடுத்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
நாம் தமிழர் கட்சியின் கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு தமிழக நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவர் முத்து ரமேஷ் ஆதரவு தெரிவித்த காரணத்திற்காக, சமூக விரோதிகள் சிலர் அவருடைய வீட்டிற்கு சென்று, மிரட்டி அச்சுறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழர்களின் வாழ்வாதார உரிமையான கள் இறக்கும் உரிமையை மீட்பதற்கு முத்து ரமேஷ் துணை நின்றதை தாங்கிக்கொள்ள முடியாத சிலரின் இத்தகைய அச்சுறுத்தல் கோழைத்தனமானது. அச்சுறுத்தல் செய்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழ்நாடு காவல்துறை இனியும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.
அறவழியில் அமைதியாக நடைபெற்ற கள் இறக்கும் போராட்டத்தின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத ஆட்சியாளர்களின் தூண்டுதல் காரணமாகவே இத்தகைய மிரட்டி அச்சுறுத்தும் செயல்கள் நடந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் இனியும் தொடரக்கூடாது என்று எச்சரிக்கின்றேன்.
இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.