முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!
முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!
முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!

சென்னை: மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ள நிலையில், அவர் செல்லும் வழியில் இருந்த பந்தல்குடி கழிவு நீர் கால்வாய்அலங்காரத் துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம் விமர்சனத்தை கிளப்பி உள்ளது. இதுகுறித்து உங்களது கருத்தை கமெண்ட் செய்யுங்கள் வாசகர்களே!
மதுரையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதனால் மதுரைக்கு இன்று (மே 31) முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
அவர் செல்லும் வழித்தடத்தில் உள்ள பந்தல்குடி கழிவு நீர் கால்வாய், அலங்காரத்துணி கொண்டு மறைக்கப்பட்டது. போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் மாறி மாறி படம் பிடித்த நிலையில், அவற்றை அவசரம் அவசரமாக அகற்றினர். அதற்குள் யாரோ போன் செய்த நிலையில், பாதியை அகற்றிவிட்டு பாதியை அகற்றாமல் அப்படியே விட்டுச் சென்றனர்.
தற்போது இந்த செயல் இணையத்தில் பேசும் பொருள் ஆகியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து, வீடியோ மற்றும் படங்களை பார்த்துவிட்டு உங்களது கருத்தை கமெண்ட் செய்யுங்கள் வாசகர்களே!
கிளம்புது விமர்சனம்! இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
மதுரையில் திராவிட மாடல் முதல்வர் நடைபயணம் போகும் போது கால் வலிக்க கூடாது, அவர் நடக்கும்பாதைகள் மட்டும் புதிய சாலைகள். அவர் கார் செல்லும் ரோடுகள் அருகில் ஓடும் கழிவுநீர் ஓடைகளை பார்க்க கூடாது என்பதற்காக பல கிலோ மீட்டர் வரை அலங்கார துணியால் மறைத்து மக்களின் வரிப்பணம் எப்படி தி.மு.க ஆட்சியில் செலவழிக்கப் படுகிறது .
இந்த பகுதியில்தான் அதிகமாக இஸ்லாமிய , பட்டியல் இனமக்கள் வாழ்கிறார்கள் வாக்களித்த மக்களே பாருங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்