50,000 தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
50,000 தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
50,000 தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : செப் 24, 2025 08:29 PM
சென்னை:கட்டுமான தொழிலாளர்கள் 50,000 பேருக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் பணியை, தொழிலாளர் நலத்துறை துவக்கி உள்ளது.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர் களுக்கு, கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு, மின் பணியாளர், பிளம்பர், வெல்டர்.
பிளாக் ஸ்மித், வர்ணம் பூசுதல், ஏ.சி., மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட தொழில்களின் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, 50,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு, சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், ஏழு நாள் பயிற்சி நடக்கிறது.
இத்திட்டத்திற்கு 45.2 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. பயிற்சியின் போது, ஒவ்வொரு தொழிலாளிக்கும் தினமும், 800 ரூபாய் வீதம், பயிற்சி காலத்திற்கு, 5,600 ரூபாய் வழங்கப்பட உள்ளது.