ADDED : செப் 18, 2025 01:19 AM
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டி ராஜ் பவனில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
பிரதமரின் 75 வயதை குறிப்பிடும் வகையில், கவர்னர் ரவி மற்றும் அவரின் குடும்பத்தினர், ராஜ் பவன் அலுவலக பணியாளர்கள் என, மொத்தம் 75 பேர், கவர்னர் மாளிகை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். கவர்னர் ரவி, 'பலா' மரக்கன்று நட்டு வைத்தார்.
இந்திய உணவு கழகத்தின் சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நாளை முதல் 21ம் தேதி வரை, 'ஆஹார்' எனும் விதவிதமான சமைத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்க உள்ளது.


