திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் கல்; அந்தியோதயா ரயிலை நிறுத்தி கல் அகற்றம்
திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் கல்; அந்தியோதயா ரயிலை நிறுத்தி கல் அகற்றம்
திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் கல்; அந்தியோதயா ரயிலை நிறுத்தி கல் அகற்றம்
ADDED : பிப் 12, 2024 06:02 AM
திண்டுக்கல் : நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயில் திண்டுக்கல் கொடைரோடு காமலாபுரம் அருகே வந்தபோது தண்டவாளத்திலிருந்த கற்களை பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி இறங்கி கற்களை அகற்றிவிட்டு மீண்டும் புறப்பட்டார். ரயிலை கவிழ்க்க சதியா என பாதுகாப்பு படையினர் விசாரிக்கின்றனர்.
அந்தியோதயா ரயில் நேற்று திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு இரவு 8:40 மணிக்கு வந்து இரவு 8:45 மணிக்கு புறப்பட்டது. அம்பாத்துரை கொடைரோடு காமலாபுரம் அருகே இரவு 9:00 மணிக்கு ரயில் வந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தில் கற்கள் இருந்ததை ரயில் ஓட்டுநர் பார்த்தார்.
ரயிலை நிறுத்தி உதவியாளரோடு கீழே இறங்கி கற்களை அகற்றி மீண்டும் ரயிலை இயக்கினர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக ரயில் ஓட்டுநர் திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என விசாரிக்கின்றனர்.
இதேபோல் பிப்.,9ல் கொடைரோடு அருகே திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் விழுந்து கரூரை சேர்ந்த பயணி காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.