Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஸ்டாலின் கூட்டத்திற்கு வந்து உயிரிழந்தோருக்கு ரூ.25 லட்சம்: தமிழக பா.ஜ., கோரிக்கை

ஸ்டாலின் கூட்டத்திற்கு வந்து உயிரிழந்தோருக்கு ரூ.25 லட்சம்: தமிழக பா.ஜ., கோரிக்கை

ஸ்டாலின் கூட்டத்திற்கு வந்து உயிரிழந்தோருக்கு ரூ.25 லட்சம்: தமிழக பா.ஜ., கோரிக்கை

ஸ்டாலின் கூட்டத்திற்கு வந்து உயிரிழந்தோருக்கு ரூ.25 லட்சம்: தமிழக பா.ஜ., கோரிக்கை

Latest Tamil News
சென்னை: 'மு தல் வர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்திற்கு அழைத்து வந்த வாகனம் கவிழ்ந்து, உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்துக்கு, தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வே ண்டும்' என, தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தா மன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

கடந்த பிப்., 22ல், கடலுார் மாவட்டம் விருதாச்சலம் அருகே திருப்பெயர் பகுதியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற, 'பெற்றோரை கொண்டாடுவோம்' நிகழ்ச்சிக்கு, வலுக்கட்டாயமாக மக்கள் அழைத்து வரப்பட்டனர்.

அவர்களை, முறையான வாகனங்களில் அழைத்து வராமல், ஆடு, மாடுகளை போல சரக்கு வாகனங்களில் ஏற்றி வந்தனர்.

பழையபட்டினம் கிராமத்தில் இருந்து வந்த வாகனத்தில், 30க்கும் மேற்பட்டோர் இருந்ததால், அந்த வாகனம் பாரம் தாங்காமல் பள்ளத்தில் கவிழ்ந்தது. பலர் காயம் அடைந்தனர்.

குப்புசாமி என்பவர் சம்பவ இடத்திலும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வேம்பரசியும், தஞ்சாவூர் மருத்துவமனையில் ராதாகிருஷ்ணன் என்பவரும் உயிரிழந்தனர்.

மூவரின் குடும்பத்திற்கும், தி.மு.க., நிதியிலிருந்து, தலா, 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

காயமடைந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், கடலுார் மாவட்டத்தில், தமிழக பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us