வனச்சரகங்கள் பெயர் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு
வனச்சரகங்கள் பெயர் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு
வனச்சரகங்கள் பெயர் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு
ADDED : ஜூன் 16, 2025 06:26 AM
சென்னை : தமிழகத்தில் மூன்று வனச்சரகங்களின் பெயர்களை மாற்ற அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வருவாய் நிர்வாக எல்லைகள் அடிப்படையில், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதன் அடிப்படையில், பல்வேறு துறைகளும், தங்கள் நிர்வாகப் பிரிவு எல்லைகளை மாற்றின.
அதன்படி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் அடிப்படையில், புதிய வனக்கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான அரசாணை கடந்த ஜன., 27ல் பிறப்பிக்கப்பட்டது.
இதில் அடங்கும் வனச்சரகங்களும் அப்போது அறிவிக்கப்பட்டன. இந்த அரசாணையில், சில திருத்தங்கள் செய்து, வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தென்காசி என்ற பெயரில் இருந்த வனச்சரகம், குற்றாலம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. தென்காசி வனக்கோட்டத்தில் அடங்கும் புளியங்குடி வனச்சரகம், இனி, புளியங்குடி சமூக வனச்சரகம் என்று அழைக்கப்படும்.
சென்னை பள்ளிக்கரணை வனச்சரகம், பள்ளிக்கரணை சிறப்பு வனச்சரகம் என, மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு பிறப்பித்துள்ளார்.