டாஸ்மாக் முறைகேடு வழக்கு; அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு; அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு; அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு!
UPDATED : மே 29, 2025 03:26 PM
ADDED : மே 22, 2025 11:54 AM

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரிய வழக்கில் அறிக்கை தர சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கடாசலபதி என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (மே 22) நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, '' சிபிஐ., விசாரணை கோரிய வழக்கு முடிவுக்கு வரும் வரை, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான முதல் தகவல் அறிக்கைகள் எதையும் முடித்து வைக்க மாட்டோம் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு துறை உத்தரவாதம் அளிக்குமா? என்று தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ராமனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அட்வகேட் ஜெனரல், 'உள்துறை செயலாளரிடம் வழக்கு எதையும் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்' என்று கூறினார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.இதையடுத்து, இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு மீதான விசாரணையை அடுத்த 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதற்கு அட்வகேட் ஜெனரல், 'உள்துறை செயலாளரிடம் வழக்கு எதையும் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்' என்று கூறினார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு மீதான விசாரணையை அடுத்த 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்