Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சென்னை வந்த விமானம் பெங்களூரில் தரையிறக்கம்

சென்னை வந்த விமானம் பெங்களூரில் தரையிறக்கம்

சென்னை வந்த விமானம் பெங்களூரில் தரையிறக்கம்

சென்னை வந்த விமானம் பெங்களூரில் தரையிறக்கம்

ADDED : செப் 25, 2025 01:22 AM


Google News
சென்னை:டில்லியில் இருந்து சென்னைக்கு நேற்று மாலை 6:07 மணிக்கு 165 பயணியருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.

விமானம் நேற்று இரவு 8:00 மணிக்கு சென்னை வான்வெளியை நெருங்கியது. விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்து விமானத்தை தரையிறக்க அனுமதியும் கிடைத்தது.

ஆனால், விமானம் மூன்று முறை தரையிறங்க முயற்சித்தும், முடியாததால் தொடர்ந்து வானில் வட்டமடித்த விமானத்தை பெங்களூரில் இரவு 8:40க்கு தரையிறக்கினர். இதனால் பயணியர் அவதியடைந்தனர்.

இதுகுறித்து ஏர் இந்தியா கூறுகையில், 'பயணியர் தடங்கலுக்கு வருந்துகிறோம். இயக்க காரணங்களால் விமானம் திருப்பி விடப்பட்டது' என, குறிப்பிட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us