புதிய அரசு பிளீடர் எட்வின் பிரபாகர்
புதிய அரசு பிளீடர் எட்வின் பிரபாகர்
புதிய அரசு பிளீடர் எட்வின் பிரபாகர்
ADDED : ஜன 28, 2024 01:32 AM

சென்னை: அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்த மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமாவை தொடர்ந்து, கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் சிலம்பண்ணன், வி.அருண் ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.
அரசு பிளீடராக பதவி வகித்த முத்துக்குமாருக்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
காலியாக இருந்த அரசு பிளீடர் பதவியில், ஏற்கனவே சிறப்பு பிளீடராக இருந்த எட்வின் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை, மறைந்த முன்னாள் நீதிபதி அசோக்குமார். பள்ளி படிப்பை கோவையிலும், சட்டப்படிப்பை சென்னையிலும் முடித்தார். 1999ல் வழக்கறிஞராக பதிவு செய்தார்.
அரசு வழக்கறிஞர், கூடுதல் பிளீடர், சிறப்பு பிளீடர், மத்திய அரசு வழக்கறிஞர் என பதவிகளை வகித்துள்ளார். பூம்புகார் கப்பல் கழகம், சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சென்னை துறைமுகம் சார்பிலும் ஆஜராகி உள்ளார்.