ADDED : அக் 03, 2025 04:07 AM
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் தி.மு.க., பயப்படுகிறதா என கேள்வி எழுப்புகின்றனர். எதைக் கண்டும் பயப்படுகின்ற கட்சி, தி.மு.க., அல்ல. எமர்ஜென்சியை கண்டே பயப்படாதவர்கள் நாங்கள். தி.மு.க., பயப்படுகிறது என்று கூற, இந்தியாவில் எந்த கட்சிக்கும் அருகதை இல்லை.
தி.மு.க.,வை பயமுறுத்துவதற்கும் எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை.
ஆட்சியில் 13 ஆண்டு காலம் இல்லாத போதும், அதைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் பணி செய்த பலமான கட்சி தி.மு.க., கரூர் சம்பவத்திற்கு முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
- ரகுபதி
தமிழக அமைச்சர், தி.மு.க.,


