போக்குவரத்து கூட்டமைப்பு வரும் 14ல் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கூட்டமைப்பு வரும் 14ல் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கூட்டமைப்பு வரும் 14ல் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 12, 2024 05:51 AM
அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், நாளை மறுதினம், கோட்ட தலைமையகங்களில் முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தில், 2019ல் 142 என்ற அரசாணை பிறப்பித்து, ஓய்வூதியத்தில் அகவிலைப்படி உயர்வு இல்லை என, அரசு அறிவித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடுத்து சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல் முறையீடு செய்த வழக்கு தள்ளுபடியானது.
சேமநல நிதி வழக்கிலும் ஓய்வு நாளில் இருந்து, 15 ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த, பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தி, கோட்ட தலைமை அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம், நாளை மறுதினம், நடைபெற உள்ளது.
- நமது நிருபர் -