பொறுப்பான பதவியில் இருப்போர் சர்ச்சை பேச்சை தவிர்க்க வேண்டும் பொன்முடி வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்
பொறுப்பான பதவியில் இருப்போர் சர்ச்சை பேச்சை தவிர்க்க வேண்டும் பொன்முடி வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்
பொறுப்பான பதவியில் இருப்போர் சர்ச்சை பேச்சை தவிர்க்க வேண்டும் பொன்முடி வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்
ADDED : செப் 17, 2025 12:30 AM
சென்னை:சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, சென்னை உயர் நீதி மன்றம் முடித்து வைத்தது.
சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார்.
@subtitle@நீக்கம்
அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்ததை தொடர்ந்து, கட்சி பொறுப்பில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அதேநேரத்தில், பொன்முடியின் பேச்சு, வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருவதாக கூறி, தாமாக முன்வந்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''முன்னாள் அமைச்சருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் மீது, ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஆதாரங்கள் இல்லாததால், அவை முடித்து வைக்கப்பட்டு உள்ளன.
இப்புகார்கள் முடித்து வைக்கப்பட்டதற்கு எதிராக, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார்தாரர்கள் மனு தாக்கல் செய்யலாம் அல்லது தனி நபர் புகார் தாக்கல் செய்யலாம்,'' என்றார்.
விசாரணை
புகார்தார்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் மகேஷ் உள்ளிட்டோர் ஆஜராகி, 'பொன்முடிக்கு எதிராக புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தாமல், முடித்து வைக்கப்பட்டு உள்ளன.
'சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது' என, தெரிவித்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கூறியதாவது:
பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, இதுபோன்ற பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும். இவ்விவகாரத்தில், போலீசாரும் முறையாக விசாரணை நடத்தியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் புகார் அளித்த நபர்களிடம் விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.
மேலும் புகார்கள் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து, புகார்தாரர்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம். இந்த விவகாரம் தொடர்பாக, தனிநபர் புகார்கள் தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
பின், பொன்முடியின் பேச்சுக்கு எதிராக, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.


