ADDED : மே 12, 2026 04:46 AM

சென்னை: 'தமிழகத்தில் கஜானா காலி' என, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், தன் முதல் உரையில், 'தமிழக அரசுக்கு 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் உள்ளது. அரசின் கஜானாவை சுத்தமாக துடைத்து, வழித்து வைத்து விட்டு சென்றுள்ளனர்' என கூறினார். அதற்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் விஜய்க்கு ஆதரவாக, ராகுலின் நண்பரும் காங்கிரஸ் நிர்வாகியுமான பிரவீன் சக்கரவர்த்தி, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 'தமிழக அரசின் ஒவ்வொரு 100 ரூபாய் வருவாயிலும், 20 ரூபாய்க்கும் மேல் கடனுக்கான வட்டிக்கே செலவாகிறது.
இது, மற்ற பெரிய மாநிலங்களை விட அதிகம். வட்டி, சம்பளம், ஓய்வூதியம் என, கட்டாய செலவுகளுக்கே 40 ரூபாய் போய் விடுகிறது. கஜானா காலி' என பிரவீன் குறிப்பிட்டுள்ளார்.





