Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து பள்ளி செல்லும் பழங்குடி மாணவர்கள்

ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து பள்ளி செல்லும் பழங்குடி மாணவர்கள்

ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து பள்ளி செல்லும் பழங்குடி மாணவர்கள்

ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து பள்ளி செல்லும் பழங்குடி மாணவர்கள்

ADDED : அக் 09, 2025 09:55 PM


Google News
Latest Tamil News
அணைக்கட்டு:ஆபத்தான முறையில் கோட்டாற்றை கடந்து, பழங்குடி மாணவர்கள் பள்ளி சென்று வருகின்றனர்.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு, பலாம்பட்டு மலை ஊராட்சியில், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தானியமரத்துாரில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு படிக்கும் மாணவர்கள், பலாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கொலையம், அரசமரத்துார், கூராணுர், தானியமரத்துார் நெக்கினி, பட்டிக்கொல்லை ஆகிய மலை கிராமங்களில் இருந்து, கரடு முர டான மலை பாதைகளின் வழியாக, கோட்டாற்றை கடந்து அங்குள்ள பள்ளிக்கு செல்கின்றனர்.

ஜவ்வா து மலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், நெக்கினியில் இருந்து அமிர்தி வழியாக செல்லும் சாலையின் குறுக்கே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலைப்பகுதியில் இருந்து பள் ளி செல்ல வந்த மாணவர்கள், ஆற்றை கடக்க முடியாமல் மதியம் வரை அங்கேயே காத்திருந்தனர்.

ம லை கிராமங் களில் மொபைல் போன் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால், பெற்றோர்களை தொடர்பு கொள்ள முடியாமல், ஆபத்தான நிலையில், காட்டில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். தகவலறிந்த பெற்றோர், மாணவர்களை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

சில மாணவர்கள் ஆபத்தான நிலையில் ஆற்றை கடந்து சென்றனர்.

கோ ட்டாற்றில், மாவட்ட நிர்வாகம், பாலம் அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை அப் பகுதியை பார்வையிட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், 'கோட்டாற் றில் விரைவில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக் கப்படும ் ' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us