பாஜ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்
பாஜ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்
பாஜ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்
ADDED : செப் 03, 2025 09:37 PM

சென்னை: பாஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக அதிமுக - பாஜ தலைமையில் மாபெரும் கூட்டணியை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படியிருக்கையில், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்பு குழு என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
இந்த நிலையில், என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் விலகியிருப்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக, காட்டுமன்னார் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், '2026 தேர்தல் கூட்டணி தொடர்பான அமமுகவின் நிலைப்பாடு குறித்து டிசம்பரில் அறிவிப்பேன். அமமுக தொண்டர்கள் விரும்பும் வகையில் எங்களின் கூட்டணி அமையும்,' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.