2026ல் தவெக - திமுக இடையே தான் போட்டி; மீண்டும் சொல்கிறார் விஜய்
2026ல் தவெக - திமுக இடையே தான் போட்டி; மீண்டும் சொல்கிறார் விஜய்
2026ல் தவெக - திமுக இடையே தான் போட்டி; மீண்டும் சொல்கிறார் விஜய்

வெறும் பாக்கெட் தான்
தமிழக மக்களுக்கு இந்த இட ஒதுக்கீடு உரிமையை வழங்கியதும் இதே மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோடு சுப்பராயன். இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதில் இவருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கினார். சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி (வாக்குறுதி எண் 456) கொடுத்தது யாரு? சொன்னீங்களே… செஞ்சீங்களா?
ஆண்ட கட்சிகளும்... ஆளும் கட்சியும்...
நாமக்கலில் முட்டைகள் வீணாகாமல் இருக்க, முட்டை சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும். பாக்டீரியா, வைரலாஜிக்கல் பரிசோதனையை மேற்கொள்ள ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை இருக்கிறது. இதுவரை ஆண்ட கட்சிகளும், இப்போது ஆளும் கட்சியும் சரி, அதைப் பற்றி யோசிக்கவே இல்லை.
ஆட்சி அமைந்ததும்...
திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு பற்றி திருச்சியில் பேசியிருந்தேன். ஆனால், நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, விசைத்தறியில் பணிபுரியும் ஏழை பெண்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடந்ததாக சொல்கிறார்கள். இதில், ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம்ம ஆட்சியமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இந்தக் கிட்னி திருட்டுக்கு ஆரம்பம் எங்கே இருக்கிறது என்று பார்த்தால், கந்து வட்டி கொடுமையில் இருக்கிறது.
முதல்வரைப் போல அடித்து விடுவோம்
இந்த சுற்றுப்பயணத்தின் போது அனைத்து மக்களும் இந்த ஒரு விஷயத்தை தான் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். நல்ல சாலை வசதி, நல்ல குடிநீர், நல்ல மருத்துவ வசதி, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை விஷயங்களைத் தான் மக்கள் கேட்கிறார்கள். விஜய் ஆட்சிக்கு வந்தால், அடிப்படை வசதிகளில் எந்த சமரசமும் இல்லை.
எப்போதும் ஒத்துப்போக மாட்டோம்
நான் ஏற்கனவே சொன்னதைத் தான் திரும்பவும் சொல்கிறேன். பாஜவுடன் எப்போதும் நாங்க ஒத்துப் போக மாட்டோம். இரண்டாவது, இந்த திமுக அரசு மாதிரி மறைமுக உறவுக்காரர்களாக இந்த பாஜவுடன் எப்போதுமே இருக்க மாட்டோம். மூன்றாவது, ஜெயலலிதா சொன்னதை மறந்துவிட்டு, ஒரு பொருந்தாக் கூட்டணியை அமைத்து, தமிழகத்தின் நலனுக்காக பாஜவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்று சொல்பவர்களைப் போல நாம் இருக்க மாட்டோம். தமிழகத்திற்கு தேவையான விஷயங்களை பாஜ அரசு செய்திருக்கிறார்களா? பிறகு எதற்கு இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று எம்ஜிஆர் தொண்டர்கள் கேட்கிறார்கள்.
தவெக - திமுக போட்டி
அதிமுக - பாஜ நேரடி உறவுக்காரர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர்களின் கூட்டணி மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று தெரியும். அதேசமயம், இந்த திமுக குடும்பம், பாஜவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருப்பதை தயவு செய்து மறந்து விடாதீங்க. வரும் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்டீங்கனா, அது பாஜவுக்கு ஓட்டு போட்ட மாதிரி. வேண்டாம் மக்களே, கொஞ்சம் யோசியுங்கள். 2026ல் தவெக மற்றும் திமுகவுக்கு தான் போட்டி. இந்த மோசமான ஆட்சியைக் கொடுக்கும் இந்த திமுக அரசு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமா, இல்ல எளியோருக்கான தவெக ஆட்சி அமைக்கணுமா?, என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களா? நாம் ஒரு கை பார்த்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.


