இரண்டு நாள் மழையால் 20 லட்சம் டன் நெல் வீண்: விவசாயிகள் அவதி
இரண்டு நாள் மழையால் 20 லட்சம் டன் நெல் வீண்: விவசாயிகள் அவதி
இரண்டு நாள் மழையால் 20 லட்சம் டன் நெல் வீண்: விவசாயிகள் அவதி

காத்திருப்பு
இதனால், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நோக்கி, செப்டம்பர் 1 முதல் விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். நெல் உற்பத்தி அதிகரித்த நிலையில், கொள்முதல் நிலையங்கள் தாமதமாகவே திறக்கப்பட்டன. நெல் பிடிப்பதற்கு தேவையான சாக்கு மூட்டைகள், தைப்பதற்கு சணல் பைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படவில்லை. நெல் அறுவடை பணிகள் கடந்த 1ம் தேதி முதல் தீவிரம் அடைந்தன.
விற்க முடியாத நிலை
இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மட்டும், 20 லட்சம் டன் அளவுக்கு நெல் தேக்கம் அடைந்துள்ளது. மழையால் நெல் மணிகள் முளைக்கத் துவங்கி உள்ளன. இதனால், கடன் வாங்கியும், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நகைகளை அடகு வைத்தும், விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை விற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியை விட தற்போது நெல் உற்பத்தி அதிகம்: பன்னீர் செல்வம்
''அ.தி.மு.க., ஆட்சியில் நாற்று நடும் அளவிற்கு முளைத்த நெல் மணிகள் இப்போது சிறியதாகவே முளைத்துள்ளன,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.


