ADDED : ஜூன் 02, 2025 01:44 PM

சென்னை: கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
துணை முதல்வர் உதயநிதி கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
இதனால் உதயநிதி கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.