Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இருட்டு பய பதற்றம் போல உதயநிதி பேசுகிறார்: பா.ஜ.,

இருட்டு பய பதற்றம் போல உதயநிதி பேசுகிறார்: பா.ஜ.,

இருட்டு பய பதற்றம் போல உதயநிதி பேசுகிறார்: பா.ஜ.,

இருட்டு பய பதற்றம் போல உதயநிதி பேசுகிறார்: பா.ஜ.,

ADDED : மே 29, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு பூமி பூஜையில் பங்கேற்ற தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: தமிழக அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு, பழனியில் முருகன் மாநாடு நடத்தினார். அதை விட சிறந்த பக்தி மாநாடாக மதுரை முருக பக்தர்கள் மாநாடு அமையும். மலேஷியா, சிங்கப்பூரில் இருந்து பக்தர்கள் வருவர். இது முழுக்க பக்தி மாநாடு. இதில் அரசியல் கிடையாது.

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்கள் வேல் யாத்திரை, நடைபயண யாத்திரை மேற்கொண்டனர். ஆனால், என் யாத்திரை, சட்டசபையை நோக்கிய தேர்தல் யாத்திரையாகத்தான் இருக்கும்.

'ஈ.டி.,க்கும் பயப்பட மாட்டேன்; பிரதமர் மோடிக்கும் பயப்பட மாட்டேன்' என துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார். அவர் கூறுவதை நினைத்தால், எனக்கு ஒரு விஷயம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. இரவு நேரத்தில் இருட்டில் தனிமையில் செல்லும் நபர், இருட்டு பயத்தை போக்குவதற்காக, உதறலோடு சினிமா பாட்டை உரக்க பாடியபடியே செல்வார். அதை போல, அமலாக்கத்துறை ரெய்டில் பயமில்லை என உதயநிதி வெளியில் சொல்வது, இருட்டு பயத்தை போக்க பாடும் நபர் போன்றது தான்.

தி.மு.க.,வினருக்கு ஈ.டி., ரெய்டு மீது பயம் இல்லை என்றால், உதயநிதிக்கு வேண்டப்பட்டோர், ரெய்டுக்கு பயந்து வெளிநாடு சென்றது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us