இந்தியா மீதான வரியை அமெரிக்கா ரத்து செய்யும்: பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை
இந்தியா மீதான வரியை அமெரிக்கா ரத்து செய்யும்: பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை
இந்தியா மீதான வரியை அமெரிக்கா ரத்து செய்யும்: பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை
ADDED : செப் 18, 2025 10:40 PM

புதுடில்லி: ''இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத அபராத வரியை ரத்து செய்யும். பரஸ்பர வரியை குறைக்கும்,'' என தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: அமெரிக்காவால் விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி நவம்பர் மாத இறுதிக்குள் விலக்கி கொள்ளப்படும். அந்த வரி நவம்பர் 30க்கு பிறகு நீடிக்காது. இது அறிக்கை அல்ல. சமீபத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் காரணமாக எனக்கு நம்பிக்கை உள்ளது. அபராத வரி குறித்த பிரச்னையில் வரும் மாதங்களில் தீர்வு காணப்படும்.
பரஸ்பர வரிக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது 25 சதவீதமாக உள்ள பரஸ்பர வரியானது. 10 முதல் 15 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது. வரி குறித்த பிரச்னைக்கு அடுத்த 8 - 10 வாரங்களில் தீர்வு கிடைக்கக்கூடும்.இவ்வாறு ஆனந்த நாகேஸ்வரன் கூறினார்.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரி விதிப்பதாக குற்றம்சாட்டிய அந்நாட்டு அதிபர் டிரம்ப், அங்கு இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு பரஸ்பரம் 25 சதவீத வரி விதித்தார். மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதமாக 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக கூறினார். இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையும் தாமதமானது.
இதனிடையே, நேற்று முன்தினம்( செப்., 16) டில்லி வந்த அமெரிக்க அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது நேர்மறையாக அமைந்ததாக இரு நாடுகளும் அறிவித்தன. இச்சூழ்நிலையில் அமெரிக்க வரி குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் அறிவித்துள்ளார்.