Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம்? உப்பளம் மைதானத்தில் போலீஸ் ஆய்வு

 புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம்? உப்பளம் மைதானத்தில் போலீஸ் ஆய்வு

 புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம்? உப்பளம் மைதானத்தில் போலீஸ் ஆய்வு

 புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம்? உப்பளம் மைதானத்தில் போலீஸ் ஆய்வு

Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரியில் த.வெ.க., தலைவர் விஜய் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்ட நிலையில், உப்பளம் துறைமுக மைதானத்தை நேற்று டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் ஆய்வு செய்தார்.

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 'ரோடு ஷோ' நடத்த அனுமதி அளிக்கக்கோரி, அக்கட்சியினர் டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.

அனுமதி


ஆனால், நீண்ட ஆலோசனைக்கு பின், கரூர் உயிரிழப்பு சம்பவம் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும், 'திறந்த வெளியில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கலாம்' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, வரும் 9ம் தேதி, விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்குமாறு, சீனியர் எஸ்.பி., கலைவாணனிடம் த.வெ.க.,வினர் மனு அளித்தனர்.

இதையடுத்து, நேற்று மாலை டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் த.வெ.க., பொதுச் செயலர் ஆனந்த் உள்ளிட்டோர், புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தை ஆய்வு செய்தனர்.

Image 1503909

ஆலோசனை


அப்போது, ஏற்கனவே மைதானத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்தும், பொதுக் கூட்டம் நடத்துவதற்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

பின், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் கூறுகையில், ''வரும் 9ம் தேதி விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ளனர். அது தொடர்பாக பார்வையிட்டுள்ளோம். தற்போது மழைக்காலமாக உள்ளதால், இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,'' என தெரிவித்தார்.

அவருடன் இருந்த த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், பதில் எதுவும் கூறாமல், சிரித்தபடியே சென்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us