அப்பா, அம்மா என்ற பெயர்களை மாற்றி விடாதீர்கள் ஸ்டாலின்: இபிஎஸ் கிண்டல்
அப்பா, அம்மா என்ற பெயர்களை மாற்றி விடாதீர்கள் ஸ்டாலின்: இபிஎஸ் கிண்டல்
அப்பா, அம்மா என்ற பெயர்களை மாற்றி விடாதீர்கள் ஸ்டாலின்: இபிஎஸ் கிண்டல்

இபிஎஸ் குமாரபாளையம் பிரசாரம்
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தில் இன்று திருச்செங்கோடு தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட சானார்பாளையம், குமாரபாளையம் மெயின் ரோடு திறந்த வெளி மைதானத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களிடையே பேசினார்.
உங்க வீட்டில் இப்படி நடந்தால்...
கரூரில் ஒரு துயர சம்பவம் நடந்தது. மக்களுக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்று துணை முதல்வர் நினைக்கவில்லை. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போனார், துயரத்தைக் கேள்விபட்டு திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார், மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார், நேராக திருச்சி சென்று மீண்டும் துபாய் போய்விட்டார், இவரெல்லாம் துணை முதல்வராக இருப்பதற்கு தகுதி இருக்கிறதா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லை. இங்கிருந்து சிகிச்சை அளிப்பதற்கு உதவிகள் செய்தால் நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். இப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆள வேண்டுமா?
உள்நோக்கம்
தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இப்படி கொள்ளையடிக்கும் அரசு தொடர வேண்டுமா?
ஓட்டை உடைசல் பஸ்
எடப்பாடி பழனிசாமி ஒரு பஸ் எடுத்துகிட்டு ஊர் ஊராகப் போகிறார், எங்க பிங்க் கலர் பஸ்ஸை எடுத்துக்கிட்டு அதை சைடு வாங்கிட்டு போயிருவோம் என்று உதயநிதி பேசினார். பிங்க் கலர் பஸ் ஓட்டை உடைசல் பஸ்ஸாகவே இருக்கிறது. மழை காலத்தில் குடையை புடிச்சிகிட்டுத்தான் பஸ்ஸில் போகவேண்டும். இன்று படிக்கட்டு கழன்றுவிட்டது, டயர் ஒரு பக்கம் கழன்றுகொண்டுபோகுது. இப்படி ஒரு மோசமான பிங்க் பஸ் கண்டிஷனில்தான் திமுக இருக்கிறது. 2026 அல்ல 2031 ல் கூட எங்க பஸ்ஸை பிடிக்க முடியாது. இது கண்டிஷனான பஸ், மக்கள் ஆதரவு பெற்ற பஸ்.


