Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இலங்கையில் தவிக்கும் தமிழர்களை மீட்கணும்: சீமான்

 இலங்கையில் தவிக்கும் தமிழர்களை மீட்கணும்: சீமான்

 இலங்கையில் தவிக்கும் தமிழர்களை மீட்கணும்: சீமான்

 இலங்கையில் தவிக்கும் தமிழர்களை மீட்கணும்: சீமான்

ADDED : டிச 01, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
சென்னை: டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

'டிட்வா' புயல் காரணமாக, இலங்கையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு வாழும் தமிழர்கள் பலர், தங்களின் வீடு மற்றும் உடைமைகளை இழந்து, தவித்து வருகின்றனர். போதிய முகாம் இல்லாததால், கிரிக்கெட் மைதானத்தில் தங்க வைத்திருப்பது, மனதை கனக்க செய்கிறது.

இலங்கையில் தவிக்கும் தமிழர்களை மீட்க, தமிழக அரசும், மத்திய அரசும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை விமான நிலையத்தில், கடந்த மூன்று நாட்களாக, உணவு கூட கிடைக்காமல் தவித்து நிற்கும் 150 தமிழர்கள் உட்பட 300க்கும் அதிகமானோரை, தாயகம் அழைத்து வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள், கனமழை வெள்ளத்தால், இலங்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கு, தங்களால் இயன்ற பொருளாதார உதவிகள் செய்ய முன்வர வேண்டும்' இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

,

நாம் தமிழர் கட்சி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us