தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: திருமாவளவன்
தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: திருமாவளவன்
தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: திருமாவளவன்

ஒரு தாய் மக்கள் மாநாடு
முதலில் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது, தலித் மக்கள் பாதிக்கப்பட்டார்கள், குடிசைகளை கொளுத்தினார்கள். எத்தனையோ பிரச்னைகள் நடந்தது. அது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
நாம் எல்லாம் ஒற்றுமையாக இருப்போம் என ஒரு தாய் மக்கள் மாநாடு நடத்தினார். ஒரு தாய் மக்கள் மாநாடு நடத்திய, தலித் அல்லாத முதல் தலைவர் ராமதாஸ்.நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, தலித் சமூகத்தை சேர்ந்தவர்களை பொதுச்செயலாளர் ஆக்கினார்.
சமூக நல்லிணக்கம்
அதற்கு முன்னாள் நடந்த வன்முறையை விடுங்கள். அந்த வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய வேண்டிய ஒரு செயல்திட்டமாக இது எல்லாம் இருந்தது. அதன் பிறகு அதனை தொடர்ந்து செய்ய வேண்டுமா, இல்லையா? சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டுமா, இல்லையா? நான் எப்படி உங்களுக்கு எதிரியாக இருக்க முடியும்? நான் எந்த இடத்தில் உங்களுக்கு எதிராக பேசி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
வெளியேறுவோம்!
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றால், திருமாவளவன் என்ன நினைத்து கொள்வார் என ராமதாசுக்கு சங்கடம் இருப்பதாக பேசப்படுகிறது என கேள்வி எழுப்பட்டது. இதற்கு திருமாவளவன் அளித்த பதில்: நான் யாருக்கும் இடையூறாக இருக்க மாட்டேன். நான் யாருக்கும் நெருக்கடி தர மாட்டேன். நிர்பந்தம் தரமாட்டேன். அது அவர்கள் எடுக்கிற முடிவுகள்.
தனியாக நிற்போம்
தி.மு.க.,வுக்கும், பா.ம.க.,வுக்கும் இடையே அப்படி ஒரு நல்லிணக்கம் இருந்து, அப்படி ஒரு முடிவு எடுத்தால் நான் தலையிட மாட்டேன். நாங்கள் வெளியேறுவோம். நாங்கள் தனியாக நிற்போம்.சும்மா வேட்பாளர்களை போடுவோம். பார்மாலிட்டி தேர்தலை சந்திப்போம்.
கொள்கை
ஜெயிப்பது, தோற்பது பற்றி எங்களுக்கு பிரச்னையே கிடையாது. நாங்கள் எங்களது கொள்கை ஏதுவோ அதுக்காக தான் களத்தில் நிற்கிறோம். இந்த தேர்தலில் நான்கு பேர் இருக்கிறோம். அடுத்த தேர்தலில் ஒன்றுமே இல்லை என்றாலும் நாங்கள் கவலைப்பட போவதில்லை. இவ்வாறு திருமாவளவன் பதில் அளித்தார்.