மேற்கு வங்க பயங்கரவாதி சென்னையில் கைது
மேற்கு வங்க பயங்கரவாதி சென்னையில் கைது
மேற்கு வங்க பயங்கரவாதி சென்னையில் கைது
UPDATED : ஜூன் 28, 2024 03:25 PM
ADDED : ஜூன் 28, 2024 03:19 PM

சென்னை: மேற்கு வங்கத்தை சேர்ந்த அனோவர் என்ற பயங்கரவாதி சென்னையில் கைது செய்யப்பட்டார். அம்மாநிலத்தில் இருந்து வந்த போலீசார் சென்னை போலீசாருடன் இணைந்து கைது செய்தனர்.
கோயம்பேட்டில்
அனோவருக்கு, ‛ அன்சர் அல் இஸ்லாம் ' என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர். இந்த அமைப்பு, அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக வங்கதேசத்தில் செயல்படும் பிரிவாக ‛ அன்சர் அல் இஸ்லாம் ' செயல்பட்டு வந்தது.அனோவர், சென்னை கோயம்பேட்டில் இஸ்திரி போடும் வேலை, கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
உபா சட்டம், இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அனோவர் மீது மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர்.