பார் கவுன்சில் தேர்தல் நடத்த குழு அமைக்கப்படுமா?
பார் கவுன்சில் தேர்தல் நடத்த குழு அமைக்கப்படுமா?
பார் கவுன்சில் தேர்தல் நடத்த குழு அமைக்கப்படுமா?
ADDED : செப் 26, 2025 01:13 AM
சென்னை:நாடு முழுதும் உள்ள பார் கவுன்சில் அமைப்புக்கான தேர்தலை, ஜனவரி 31க்குள் நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், தமிழக பார் கவுன்சில் மூத்த உறுப்பினர் எம்.வேல்முருகன் அளித்த பேட்டி:
தமிழக பார் கவுன்சில் நிர்வாகிகள் பதவிக்கு, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக தேர்தல் நடக்கவில்லை. மாநிலத்தில், 1.30 லட்சம் வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்களில், ஒரு லட்சம் வழக்கறிஞர்கள் வரை, 'பிராக்ட்டீஸ்' செய்கின்றனர். எனவே, முறையாக தேர்தல் நடக்க வேண்டும்.
தேர்தலில் முறைகேடு நடக்காமல் தடுக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து, தமிழக பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும். எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் வாய்ப்பு தரும் வகையில், தேர்தல் முறையாக நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.