Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/நானே பொறுப்பு... ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த வழக்கில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் வாக்குமூலம்

நானே பொறுப்பு... ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த வழக்கில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் வாக்குமூலம்

நானே பொறுப்பு... ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த வழக்கில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் வாக்குமூலம்

நானே பொறுப்பு... ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த வழக்கில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் வாக்குமூலம்

Latest Tamil News
ரோட்டர்டாம்: போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் அதிபராக இருப்பது பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர். கடந்த 2022ம் ஆண்டில், டியுடெர்ட்டியை வீழ்த்தி, மார்கோஸ் அதிபரானார். மணிலாவின் முன்னாள் மேயராக இருந்த போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் புழக்கத்தில் இருந்த சட்டவிரோத போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க முற்பட்ட டியுடெர்ட், அதற்காக மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பலரை மொத்தமாக கொன்று குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களை, அவரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட், முன்னாள் அதிபர் டியுடெர்ட்டியை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது.

அதன்படி நேற்று முன்தினம் (மார்ச் 11), ரோட்ரிகோ டியுடெர்ட், ஹாங்காங்கில் இருந்து மணிலா சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கியதும், மணிலா போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் அவர், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

சர்வதேச கோர்ட்டுக்கு அவர் அழைத்துச் செல்லப்படும் போது, அவரது ஆதரவாளர்கள் திரண்டு நின்று, அவரை விடுவிக்கும்படி கோஷங்களை எழுப்பினர்.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க சர்வதேச குற்றவியல் கோர்ட் உத்தரவிட்டது. இதனிடையே, தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு பேசும் வீடியோவை அவரது ஆலோசகர் பேஸ்புக் பகிர்ந்துள்ளார். அதில், 'நான் தான் நம் சட்டம் மற்றும் ராணுவத்தை வழிநடத்தினேன். உங்களை பாதுகாப்பேன் என்று கூறினேன், இதற்கான அனைத்துப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன்,' எனக் கூறியுள்ளார். தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us