Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ பாக்.,கில் சுதந்திரமாக சுற்றி வரும் பயங்கரவாதி மசூத் அசார்

பாக்.,கில் சுதந்திரமாக சுற்றி வரும் பயங்கரவாதி மசூத் அசார்

பாக்.,கில் சுதந்திரமாக சுற்றி வரும் பயங்கரவாதி மசூத் அசார்

பாக்.,கில் சுதந்திரமாக சுற்றி வரும் பயங்கரவாதி மசூத் அசார்

UPDATED : ஜூலை 18, 2024 10:19 AMADDED : ஜூலை 18, 2024 12:53 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் - இ - முகமதுவின் தலைவர் மசூத் அசார் இறந்துவிட்டதாகவும், படுத்த படுக்கையாக இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஜனவரி 1 முதல் நேற்று முன் தினம் வரை நடந்த தொடர் பயங்கர வாத சம்பவங்களில் ராணுவ மேஜர் உட்பட 12 வீரர்கள் மற்றும் 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்; 55 பேர் காயமடைந்துள்ளனர். சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில், உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளின் போர்வையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என உளவுத்துறை கூறுகிறது.

ஜெய்ஷ் - இ --- முகமது பயங்கரவாத அமைப்பு, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறது. இதன் தலைவரான மசூத் அசார், ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்.

இவர் பாகிஸ்தான் சிறை மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், குண்டுவெடிப்பில் இறந்துவிட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் அவர் பாகிஸ்தானின், பாவல்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, தற்கொலை படை தாக்குதலுக்கு ஆதரவாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதை நம் நாட்டு தனியார் டிவி சேனல், மசூத் அசாரின் பழைய ஆடியோவுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கியதற்காக சர்வதேச நிதி நடவடிக்கை குழுவால் கிரே பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது.

அப்பட்டியலில் இருந்து 2022ல் தான் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வரும் செய்தி வெளியாகியிருப்பது, அந்நாட்டு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us