வயநாடு நிலச்சரிவு: அமெரிக்க , ரஷ்ய அதிபர்கள் இரங்கல்
வயநாடு நிலச்சரிவு: அமெரிக்க , ரஷ்ய அதிபர்கள் இரங்கல்
வயநாடு நிலச்சரிவு: அமெரிக்க , ரஷ்ய அதிபர்கள் இரங்கல்
UPDATED : ஆக 02, 2024 03:06 AM
ADDED : ஆக 02, 2024 02:54 AM

வாஷிங்டன்: கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் ரஷ்ய அதிபர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்..
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான நிலைச்சரிவில் சிக்கி 295 பேர்பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ஜில் மற்றும் நானும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சோகமான நிகழ்வில் மீட்பு பணிகள் மேற்கொண்டு வருபவர்களின் துணிச்சலையும் பாராட்டுகிறோம். இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
கேரள நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை தெரிவிக்கவும் , காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.