நேபாளத்தில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு
நேபாளத்தில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு
நேபாளத்தில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு
ADDED : செப் 16, 2025 07:30 AM

காத்மாண்டு ; நம் அண்டை நாடான நேபாளத்தில், சமீபத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில் நேற்று, இடைக்கால அரசின் அமைச்சர்களாக மூன்று பேர் பதவியேற்றனர். அவர்களுக்கு அதிபர் ராம்சந்திர பவுடேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னாள் நிதி செயலர், ரமேஷ்வர் கனல் நிதியமைச்சராகவும்; நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் குல்மான் கிசிங் எரிசக்தி, நீர்வளம், போக்குவரத்து அமைச்சராகவும்; போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சு நடத்திய வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் ஆர்யல், உள்துறை, சட்டம், பார்லி., விவகார அமைச்சராகவும் பதவியேற்றனர்.