Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் வீரர்கள் 30 பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் வீரர்கள் 30 பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் வீரர்கள் 30 பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் வீரர்கள் 30 பேர் பலி

ADDED : ஜூன் 14, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
டெஹ்ரான்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானை சேர்ந்த 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக ஈரானிய ஊடகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: ஈரானின் வடமேற்கு மாகாணத்தில் 30 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.இதில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 55 பேர் காயமடைந்துள்ளனர். செஞ்சிலுவை சங்க வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என தெரிவித்து உள்ளது.

டிரம்ப் - புடின் ஆலோசனை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து அமெரிக்க அதிபர் புடினுடன், ரஷ்ய அதிபர் புடின் ஆலோசனை நடத்தினார். இதனை ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: இஸ்ரேல் - ஈரான் மோதல் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஈரான் மீதான தாக்குதலுக்கு புடின் கண்டனம் தெரிவித்தார். இரு தலைவர்களும், ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர். சுமார் 50 நிமிடங்கள் நடந்த இந்த ஆலோசனை, அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது என்றார்.

இதனிடையே, இஸ்ரேல்- ஈரான் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர உதவியாக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.

சவுதி இளவரசருடன் பிரிட்டன் பிரதமர் பேச்சு

மேலும், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரிட்டன் பிரதமர் ஸ்டார் கெய்மர் ஆலோசனை நடத்தினார். அப்போது, மோதல் குறித்து கவலை தெரிவித்ததுடன், உடனடியாக பதற்றம் தணிய வேண்டும் என இருவரும் வலியுறுத்தினர்.

ஜெர்மனி எச்சரிக்கை

மத்திய கிழக்கில் இன்னும் பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஈரானின் அணுஆயுத திட்டம் இஸ்ரேலுக்கு மட்டும் அல்லாமல், சவுதிக்கும், இந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us