எவரெஸ்டில் சிக்கிய 850 பேர் பத்திரமாக மீட்பு
எவரெஸ்டில் சிக்கிய 850 பேர் பத்திரமாக மீட்பு
எவரெஸ்டில் சிக்கிய 850 பேர் பத்திரமாக மீட்பு
ADDED : அக் 09, 2025 03:01 AM
மஹாலங்கூர்:எவரெஸ்ட் சிகரத்தில், கடுமையான பனிப்புயலில் மூன்று நாட்களாக சிக்கியிருந்த 850க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், எவரெஸ்ட் மலைச் சிகரம் பகுதியில், சமீபத்தில் திடீரென பனிப் புயல் ஏற்பட்டது.
இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் அங்கு சிக்கி தவித்தனர். உள்ளூர் கிராம மக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து, 580 மலையேற்ற வீரர்கள் மற்றும் 300 வழிகாட்டிகளை பத்திரமாக மீட்டனர்.


