ஆசிய கோப்பை கிரிக்கெட்: 21 ரன்களில் இந்தியா வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட்: 21 ரன்களில் இந்தியா வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட்: 21 ரன்களில் இந்தியா வெற்றி
ADDED : செப் 20, 2025 02:39 AM

அபுதாபி: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ஓமனை 21 ரன்னில் வீழ்த்தியதன் மூலம் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் நடக்கிறது. நேற்று அபுதாபியில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில், இந்திய அணி, ஓமனை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு சுப்மன் கில் (5), அபிஷேக் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது.
அக்சர் படேல் 26 ரன் எடுக்க, ஷிவம் துபே (5) நிலைக்கவில்லை. 41 பந்தில் அரைசதம் அடித்த சாம்சன், 56 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா, 29 ரன் (18 பந்து) எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 188/8 ரன் எடுத்தது.
189 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஓமன் அணி கேப்டன் ஜதிந்தர் சிங் (32), ஆமிர் கலீம் ஜோடி துவக்கம் தந்தது. இந்திய பவுலர்கள் ஏமாற்ற, ஓமன் அணியில் கலீம் 38 பந்தில் அரைசதம் அடித்தார். , ஓமன் வெற்றிக்கு கடைசி 24 பந்தில் 58 ரன் தேவைப்பட, 'டென்சன்' ஏற்பட்டது. ஹர்ஷித் ராணா பந்தில், பாண்ட்யாவில் கலக்கலான 'கேட்ச்சில்' கலீம் (64) அவுட்டானார். ஹம்மத் (51) பாண்ட்யா பந்தில் அவுட்டானார். ஓமன் அணி 20 ஓவரில் 167/4 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் ஹாட்ரி வெற்றி பெற்றது.