Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை

பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை

பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை

பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை

ADDED : மார் 17, 2025 03:43 PM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: ஜோ பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகளை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டார். 'அது டிஜிட்டல் முறை கையெழுத்தில் வழங்கப்பட்டது. அவருக்கு எதுவும் தெரியாது' என டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தினமும் அவர் வெளியிடும் புது புது அறிவிப்புகள் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்நிலையில், இன்று ஜோ பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகளை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இது குறித்து, சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜோ பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது. அது டிஜிட்டல் முறை கையெழுத்தில் வழங்கப்பட்டது. அவருக்கு எதுவும் தெரியாது. மன்னிப்பு வழங்கியது குறித்து பைடனுக்கு விளக்கப்படவில்லை.

அது அங்கீகரிக்கப் படவில்லை. அவருக்கு அவற்றைப் பற்றி எதுவும் தெரியாது. உண்மை என்னவென்றால், நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பைடனின் ஒப்புதல் இல்லாமல், அதிகாரிகள் சார்பாக கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை ரத்து செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது, போலி தகவல் வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனை குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது. கடைசி நேரத்தில், தனது மகன் ஹன்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு கொடுக்கும் ஆவணங்களில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல, பைடன் குடும்பத்தினர் வேறு சிலர் மீதான குற்றச்சாட்டுகளிலும் மன்னிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

போதை வழக்குகளில் தொடர்புடைய பலருக்கும், பதவிக்காலம் முடிவதற்கு ஒரு நாட்கள் முன்னதாக பைடன் மன்னிப்பு வழங்கியிருந்தார்.இப்படி அவர் வழங்கிய, பல நூறு பேருடைய மன்னிப்பு உத்தரவுகளை செல்லாது என்று அதிபர் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us