Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ சீனாவின் மிக ஆபத்தான 'டி.எப்.-, - 5பி' ஏவுகணை

சீனாவின் மிக ஆபத்தான 'டி.எப்.-, - 5பி' ஏவுகணை

சீனாவின் மிக ஆபத்தான 'டி.எப்.-, - 5பி' ஏவுகணை

சீனாவின் மிக ஆபத்தான 'டி.எப்.-, - 5பி' ஏவுகணை

ADDED : ஜூன் 06, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
பீஜிங்: நம் அண்டை நாடான சீனா, அணு ஆயுதங்களை குவித்து வருகிறது. சீன ராணுவம் சமீபத்தில் 'டி.எப்., - 5பி' எனும் சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணையை தயாரித்துஉள்ளது.

இதன் விபரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அரசு ஊடகமான சி.சி.டி.வி.,யில் இந்த அணு ஆயுதத்தின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்த ஏவுகணை 12,000 கி.மீ., துாரம் வரை பயணிக்கும் ஆற்றல் உடையது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பாவின் பல பகுதிகளை எளிதில் தாக்க முடியும். இரண்டு அணு ஆயுதங்களை வெவ்வேறு இலக்குகளுக்கு ஒரே சமயத்தில் சுமந்து செல்லும் திறன் கொண்டது.

இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் மீது அமெரிக்கா பயன்படுத்திய அணுகுண்டை காட்டிலும் 200 மடங்கு வீரியம் கொண்டது என, அதில் கூறப்பட்டுள்ளது.

சீனாவிடம் தற்போது 600 அணு ஆயுதங்கள் உள்ளன. வரும் 2030க்குள் இதை, 1,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. நம் நாட்டில், 180 அணு ஆயுதங்கள் உள்ளன.

தகவல் துளி: சீனாவிடம் தற்போது, 600 அணு ஆயுதங்கள் உள்ளன. வரும் 2030க்குள், இதை, 1,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. நம் நாட்டில், 180 அணு ஆயுதங்கள் உள்ளன.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இவற்றுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us