தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம்: 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு
தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம்: 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு
தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம்: 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு

கலிபோர்னியா : ‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'-விற்கு தேர்வான முதல் இந்திய நடிகை என்ற கவுவரத்தை பெற்றுள்ளார் தீபிகா படுகோனே.
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ள இவர் ஹாலிவுட்டிலும் நடித்துள்ளார். நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்த இவருக்கு துவா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் 2026ம் ஆண்டுக்கான ‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்' என்ற கவுரவத்தை பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பை ஹாலிவுட்டின் வர்த்தக சபை நேற்று இரவு அறிவித்தது. மோஷன் பிக்சர் பிரிவில் இவர் தேர்வாகி உள்ளார். இதன்மூலம் மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகா பெற்றுள்ளார். தீபிகா உடன் பிரிட்டன் நடிகை எமிலி பிளன்ட், பிரெஞ்ச் நடிகர் டிமோதி சால்மெட் மற்றும் ஹாலிவுட் நடிகர் ராமி மலெக் ஆகியோரும் இதே பிரிவில் தேர்வாகி உள்ளனர்.

பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார பிரிவில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இந்த கவுரவம் தீபிகாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கவுரவத்தால் உலக அரங்கில் இந்தியாவை மேலும் இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஏற்கனவே 2018ல் டைம் பத்திரிக்கையின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் தீபிகா படுகோனே இடம் பெற்று இருந்தார். மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரியாகவும் உள்ளார். இப்போது இந்த கவுரவத்தால் அவரின் புகழ் மேலும் அதிகமாகி உள்ளது.
