Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை

இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை

இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை

இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை

ADDED : ஜூன் 08, 2025 08:33 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: 'ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என தொழில் அதிபர் எலான் மஸ்குக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், 'தி அமெரிக்கா பார்ட்டி' என்ற பெயரில் கட்சி துவங்க இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் செய்தி சேனலுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி:

எலான் மஸ்க் மிகவும் அவமரியாதைக்குரியவர். அது மிகவும் மோசமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். அவர் வெள்ளை மாளிகையை அவமரியாதை செய்தார். அவரால் (எலான் மஸ்க்) நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் அவருக்கு நிறைய உதவி செய்திருக்கிறேன். அதிபர் பதவியை அவமரியாதை செய்ய முடியாது.

வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராக போட்டியிட ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு எலான் மஸ்க் நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மஸ்க் உடனான உறவுகளை சீர்படுத்தும் எண்ணம் இல்லை. நான் மற்ற வேலைகளைச் செய்வதில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். அவரிடம் பேசும் எண்ணம் எனக்கு இல்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us